என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தகாத உறவு"
- தலைமை நிர்வாக அதிகாரியுடன் தகாத உறவில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
- இருவரும் தகாத உறவில் ஈடுபட்டதன் மூலம் நிறுவனத்தின் கொள்கைகள் மற்றும் நெறிமுறைகளை மீறியதாக நார்ஃபோக் சதர்ன் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.
தலைமை நிர்வாக அதிகாரியுடன் தகாத உறவில் ஈடுபட்டதற்காக இந்திய வம்சாவளி வழக்கறிஞர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.
நார்ஃபோக் சதர்ன் கார்ப்பரேஷனின் தலைமை சட்ட அதிகாரியான நபனிதா நாக், தனது முதலாளியின் தலைமை நிர்வாக அதிகாரி ஆலன் ஷாவுடன் தகாத உறவில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
இருவரும் தகாத உறவில் ஈடுபட்டதன் மூலம் நிறுவனத்தின் கொள்கைகள் மற்றும் நெறிமுறைகளை மீறியதாக நார்ஃபோக் சதர்ன் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.
இந்நடவடிக்கையானது "நிறுவனத்தின் தலைமைச் சட்ட அதிகாரியுடன் தகாத உறவில் ஈடுபட்டதன் மூலம் ஷா நிறுவனத்தின் கொள்கைகளை மீறியதாக, நடந்துகொண்டிருக்கும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஷாவின் விலகல் நிறுவனத்தின் செயல்திறன், நிதி அறிக்கை மற்றும் செயல்பாடுகளின் முடிவுகளுடன் தொடர்பில்லாதது" என்று நார்ஃபோக் சதர்ன் கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இருவரும் 2017ம் ஆண்டில் திருமணம் செய்துக் கொண்டனர்.
- தன் மீது நக்ஷத்ரா வேண்டுமென்றே பழி சுமத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
மிஸ் வைசாக் அழகிப் போட்டியின் முன்னாள் அழகி நக்ஷத்ராவும், திரைப்பட நடிகர் திரிபுரானா வெங்கட சாய் தேஜாவும் கடந்த 2013ம் ஆண்டில் ஒரே படத்தில் நடித்ததை தொடர்ந்து காதல் வயப்பட்டு இருவரும் 2017ம் ஆண்டில் திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது.
கடந்த சில வருடங்களாக தேஜாவிற்கு மற்றொரு பெண்ணுடன் தகாத உறவு இருந்து வருவதாக நக்ஷத்ரா குற்றம் சாட்டி வந்தார். ஆனால் தேஜா அதற்கு மறுப்பு தெரிவித்து வந்தார்.
தன் மீது நக்ஷத்ரா வேண்டுமென்றே பழி சுமத்தி வருவதாகவும் கூறினார்.
இந்நிலையில், தேஜா மற்றொரு பெண்ணுடன் இருக்கும் தகாத உறவை ஊடகத்திற்கு வெளிச்சம்போட்டு காட்ட வேண்டும் என்று, நக்ஷத்ரா தேஜாவின் இருப்பிடத்திற்கே சென்றுள்ளார்.
அங்கு, மற்றொரு பெண்ணுடன் இருந்த தேஜா நக்ஷத்ராவிடம் கையும் களவுமாக சிக்கியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும், 2021ம் ஆண்டு முதல் இருவரும் விவாகரத்து தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது என்றும் அதனால், புதிதாக வழக்கு எதுவும் பதிய செய்யப்படவில்லை என்றும் நகர வட்ட ஆய்வாளர் பரதசாரதி தெரிவித்துள்ளார்.
- இந்தோனேஷியா நாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது அந்த நாட்டில் வசித்து வரும் மற்ற நாட்டினருக்கும் பொருந்தும்
- கருக்கலைப்பை சட்ட விரோதமாக அறிவிக்கும் பழைய சட்டம் தொடரவேண்டும் என்று மசோதாவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஜகார்த்தா:
இந்தோனேஷியாவில் குற்றவியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர அந்நாட்டு பாராளுமன்றத்தில் மசோதா கொண்டு வரப்பட்டது. இந்த சட்ட திருத்த மசோதா பாராளுமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. அதன்படி திருமணத்தை மீறி தகாத உறவு வைத்து இருந்தால் ஓராண்டு வரை சிறை தண்டனை கிடைக்கக்கூடிய குற்றமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கான புகாரை கணவர் அல்லது மனைவி, பெற்றோர், குழந்தைகள்தான் கொடுக்க வேண்டும். இந்த சட்டம் இந்தோனேஷியா நாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது அந்த நாட்டில் வசித்து வரும் மற்ற நாட்டினருக்கும் பொருந்தும்
இந்தோனேஷியாவில் அங்கிகரீக்கபட்டுள்ள இந்து மதம், இஸ்லாம், கிருஸ்தவம், பவுத்தம், கன்பூசியம் ஆகிய 5 மதங்களை அவமதித்தால் 5 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கும் வகையில் மதநிந்தனைச் சட்டம் கொண்டுவரப்பட்டு உள்ளது. மார்க்சிய லெனினிசத்தை பரப்புபவர்களுக்கு 10 ஆண்டு வரையிலும் கம்யூனியசத்தை பரப்புபவருக்கு 5 ஆண்டுகள் வரையிலும் சிறைதண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கருக்கலைப்பை சட்ட விரோதமாக அறிவிக்கும் பழைய சட்டம் தொடரவேண்டும் என்று மசோதாவில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால் உயிருக்கு ஆபத்தான மருத்துவ சூழலை கருத்தில் கொண்ட பெண்களுக்கும், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்களுக்கும் 12 வாரத்துக்கான கருவை கலைத்து கொள்ளலாம் என்ற விதி விலக்கு அந்த சட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளது. பல நாடுகளில் மரண தண்டனைக்கு எதிர்ப்பு வலுத்தும் வரும் சூழலில் இந்தோனேஷியாவில் மரண தண்டனை தொடரும் என புதிய மசோதாவில் தெரிவிக்கபட்டு உள்ளது. ஆனாலும் மரண தண்டனை கைதிகள் 10 ஆண்டுகள் நன்னடத்தையுடன் இருந்தால் அவர்களின் தண்டனை ஆயுள் தண்டனையாகவோ அல்லது 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்தில் குறிப்படப்பட்டுள்ளது. பதவியில் உள்ள அதிபர்கள், துணை அதிபர்கள் மற்றும் அரசு அமைப்புகளை அவமதித்தால் தண்டனை கொடுக்கும் வகையில் புதிய சட்டம் சேர்க்கப்பட்டு உள்ளது. இந்த சட்ட திருத்தங்களுக்கு மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்று புரூனே. இங்கு ஷரியத் சட்டம் பின்பற்றப்படுகிறது. அதுவும் அண்டை நாடுகளான மலேசியா, இந்தோனேசியாவை காட்டிலும் இங்கு ஷரியத் சட்டம் மிகக் கடுமையாக நடைமுறைப் படுத்தப்படுகிறது.
இந்த நாட்டில் தகாத உறவும் (கள்ள உறவு), ஓரினச்சேர்க்கையும் கிரிமினல் குற்றமாகக் கருதப்படுகிறது. ஆனாலும் இந்த குற்றங்கள் அங்கு பெருகி வந்த நிலையில் தண்டனையை கடுமையாக்க முடிவு எடுத்தனர்.
தண்டனை கடுமையாகிறபோதுதான் குற்றங்கள் நடப்பது முடிவுக்கு வரும் என கருதிய அந்த நாட்டின் மன்னர் இவ்விரு குற்றங்கள் செய்வோருக்கும் மரண தண்டனை விதிக்க உத்தரவிட்டு சட்டம் கொண்டு வந்தார்.
இந்த நாட்டில் மரண தண்டனையை குற்றவாளிகள் மீது கல் எறிந்து கொன்று நிறைவேற்றுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
புரூனே நாட்டில் திருட்டை ஒழிக்கவும் தண்டனையை கடுமையாக்க சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி முதல் முறை திருடுகிற குற்றவாளிகளுக்கு வலது கையை வெட்டி விடுவார்கள். இரண்டாவது முறை அதே நபர் திருடினால் அவருக்கு இடது காலை வெட்டி விடுவார்கள்.
இப்படி கடுமையான தண்டனை விதிக்கிறபோது திருட்டை ஒழித்துக்கட்டி விடலாம் என்று அந்த நாட்டின் அரசு நம்புகிறது.
இந்த தண்டனைகள் வரும் 3-ந் தேதி (புதன்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான முறையான அறிவிப்பை அந்த நாட்டின் அட்டார்னி ஜெனரல் அலுவலகம் கடந்த டிசம்பர் மாதம் 29-ந் தேதி வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே இப்படி தகாத உறவு, ஓரினச்சேர்க்கை, திருட்டு ஆகிய 3 குற்றங்களுக்கும் தண்டனையை அதிகரிப்பது என கடந்த 2013-ம் ஆண்டு முடிவு எடுத்து உள்ளனர்.
ஆனாலும் வலது சாரி அமைப்புகளின் கடும் எதிர்ப்பினால், எப்படி நடைமுறைப்படுத்துவது என்று அதிகாரிகள் நீண்ட ஆலோசனையில் ஈடுபட்டு வந்ததால் தாமதம் ஆகி இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
அதே நேரத்தில் புரூனே ஆராய்ச்சியாளர் ரேச்சல் சோவா ஹோவர்டு இந்த தண்டனைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மேலும், ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் என்னும் சர்வதேச அமைப்பு இந்த புதிய தண்டனைகளை அமல்படுத்துவதை புரூனே உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.
ஆனால், புரூனே மத விவகார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறும்போது, “இந்தப் பிரச்சினையில் மன்னர் தனது அறிவிப்பை 3-ந் தேதி வெளியிடுவார்” என குறிப்பிட்டார். #Syariahlaw
புஷ்பலதா, தற்கொலைக்கு முன்னர் உருக்கமான கடிதம் எழுதி உள்ளார். அதனை போலீசார் கைப்பற்றினர். அதில் அவர் எழுதி இருப்பதாவது:-
கணவருக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் தொடர்பு உள்ளது. இதனால் அவர் காலையில் வெளியில் செல்லும் போது எங்களது 1½ வயது பெண் குழந்தையை வெளியில் அழைத்து சென்று காதலியிடம் கொடுத்து விடுகிறார். மாலையில் வீடு திரும்பும் போது அழைத்து வருகிறார்.
குழந்தையை பறிக்கும் கணவர், என்னிடமும் பிரியமாக இல்லை. எனவே நான் உயிரை விடுகிறேன். என்சாவுக்கு யாரும் காரணம் இல்லை. என் மரணத்துக்கு பின்னர் கணவர் சந்தோஷமாக இருக்க வேண்டும்.
என் மகளின் சாவுக்கு கணவர் ஜான்பால் பிராங்கிளினே காரணம். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறி உள்ளனர்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது. #AdulteryVerdict #Section497
அட, பாவி மனுஷா... உன்னை நம்பிதானே என் சாதி சனத்தையெல்லாம் உதறி விட்டு உன்கூட வந்தேன்..!
எனக்கு துரோகம் பண்ணிட்டியே? அவளும் என்னை மாதிரி ஒரு பெண் தானே!
ஏன் கத்துறே? ஊரு உலகத்துல நடக்காத தப்பையா செய்து விட்டேன்? போ... போய் வேலையை பார்...!
ஆமய்யா... ஏன் சொல்ல மாட்டே? நீயே கதின்னு உல் காலடியில் கிடக்கிறேன் பார்! நீ இதுவும் செய்வே! இதுக்கு மேலேயும் செய்வே! உன்னை இப்படியே விட்டால் சரிப்பட்டு வர மாட்டாய்! போலீசுல சொல்லி முட்டிக்கு முட்டி தட்டினால் அவ வீட்டுக்கு போக மாட்டாய்...! இப்ப பாரு!
அடியேய்.... எங்க... போலீசுக்கா? சுப்ரீம் கோர்ட்டுக்கு போனால் கூட ஒண்ணும் செய்ய முடியாதுடி! உள்ளதை சாப்பிட்டு கிட்டு ஒழுங்கா இரு....!
- இது கற்பனையில் எழுதப்பட்ட வசனம் அல்ல. நிஜமாகவே சென்னை நெசப்பாக்கம் பாரதி நகரில் நடந்தது.
ஜான்பால் பிராங்கிளின் (26) அந்த பகுதியில் பூங்கா காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி புஷ்பலதா (24).
இருவரும் காதலித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்கள். ஒரு வயதில் குழந்தையும் உள்ளது.
நல்ல காதல் பூர்த்தி ஆனதும் கள்ளக்காதலுக்கு பிராங்கிளின் வலைவீச வலையில் சிக்கி இருக்கிறார் அதே பூங்காவில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்த பெண்.
கள்ளக்காதலியே தஞ்சம் என்று அந்த பெண் வீட்டிலேயே இருந்துள்ளார். கணவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்படவே புஷ்பலதா கண்காணிக்க தொடங்கி இருக்கிறார்.
அப்போது கணவரின் கள்ளத்தொடர்பை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இருந்தாலும் கணவரிடம் கேட்க முடியாமல் தவித்து இருக்கிறார்.
கள்ளக்காதலியுடன் உறவாடி விட்டு வந்திருப்பதை அறிந்ததும் புஷ்பலதா ஆத்திரத்தில் பொங்கி எழுந்திருக்கிறார். அப்போது அவர்களுக்குள் நடந்த வாக்குவாதம்தான் மேலே குறிப்பிட்டு இருப்பது.
வாக்குவாதம் முடிந்ததும் கோபத்தில் பிராங்கிளின் வீட்டை விட்டு வெளியே சென்று இருக்கிறார்.
அவரது கோபத்தை கள்ளக்காதலியின் மோகம் கட்டுப்படுத்தி இருக்கும். ஆனால் எந்த தவறும் செய்யாத புஷ்பலதாவின் ஆத்திரத்தை எது கட்டுப்படுத்தும்?
கணவரிடமும் நியாயம் கிடைக்காது. கோர்ட்டுக்கு போனால் கூட நீதி கிடைக்காது என்றதும் புஷ்பலதாவுக்கு வாழ்க்கை வெறுத்தது. மின் விசிறியில் தூக்கு போட்டு தன் உயிரையே முடித்துக் கொண்டார்.
வீடு திரும்பிய பிராங்கிளின் குழந்தை அழுது கொண்டிருந்ததை பார்த்ததும் மனைவியை தேடி இருக்கிறார். வெற்றுடலாய் மின் விசிறியில் புஷ்பலதா தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
சட்டம் வேறு! நடைமுறை வாழ்க்கை வேறு! நடைமுறைக்கு ஏற்ற வகையில் சட்டம் வரலாம். சட்டத்துக்கு ஏற்ற வகையில் நடைமுறை வாழ்க்கையை மாற்ற இயலுமா?
பிராங்கிளினும் விரும்பினார். கள்ளக்காதலியும் விரும்பினார். இருவரது சம்மதத்துடன் தகாத உறவும் நல்ல உறவாகி விட்டது.
அதற்காக புஷ்பலதாவும் ‘நீயும், நானும்’ என்பதுதான் நமது சட்டம். நீ ஒருத்தியை தேடிச் சென்றிருக்கிறாய். நானும் ஒருவனை தேடிக் கொள்கிறேன் என்று செல்வாரா? அவர் இந்த மண்ணின் கலாச்சாரத்தின் நடமாடும் அடையாளம் அல்லவா? தனக்கொரு கேடு என்றால் தன்னைத்தான் அழித்துக் கொள்வாள். அதைத்தான் செய்து இருக்கிறார்.
சரி, இனி புஷ்பலதாவின் சாவுக்கு காரணமாகி விட்டார் என்ற சட்டப்பிரிவின் மூலம் பிராங்கிளின் தண்டனைக்கு உள்ளாகலாம்.
எந்த தவறும் செய்யாத அவர்களது குழந்தையும் தண்டிக்கப்பட்டுள்ளதே! அதற்கு யார் பதில் சொல்வது?
யோசிக்காமல் எடுக்கும் எந்த முடிவும் மிகப்பெரிய அழிவுக்கு காரணமாகி விடலாம். பாண்டிய மன்னன் எடுத்த தவறான முடிவு மதுரையின் அழிவுக்கு வழி வகுத்ததல்லவா! #AdulteryVerdict #ExtramaritalAffair
சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் இந்திய தண்டனை சட்டம் 597-வது பிரிவில் தகாத உறவில் ஈடுபடும் ஆணுக்கு மட்டும் 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்க வகை செய்கிறது. பெண்ணுக்கும் சமமான தண்டனை வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று நீதிபதிகள் தீர்ப்பை வாசித்தனர்.
அப்போது ஆணுக்கு மட்டும் 5 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கும் 597-வது பிரிவு ரத்து செய்யப் படுவதாகவும் தகாத உறவு குற்றம் இல்லை என்றும் பரபரப்பு தீர்ப்பளித்தனர்.
கணவர் என்பவர் பெண்ணின் எஜமானர் அல்ல. ஆணுக்கு பெண் சமம். இதில் பெண்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுவது சட்ட விரோதம் ஆகும். ஆணுக்கு சமமாக பெண்களையும் நடத்த வேண்டும். இதில் பாகுபாடு காட்டுவது சட்ட விதிமீறல் ஆகும்.
கணவன்-மனைவி இடையே விவாகரத்து நடக்க தகாத உறவு காரண மாகிறது. தகாத உறவு விஷயத்தில் அதில் யாரும் தற்கொலைக்கு தூண்டாத வரையில் அது குற்றம் இல்லை. தகாத உறவில் விவாகரத்து நடக்கலாம். யாரும் தற்கொலைக்கு தூண்டப்படக்கூடாது.
திருமணமான பெண் கணவருடன் மட்டுமல்ல, வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்தால் அது குற்றம் இல்லை. மேற்கு ஐரோப்பா மற்றும் சீனாவில் தகாத உறவு குற்றம் இல்லை. எனவே ஆணுக்கு மட்டும் தண்டனை விதிக்கும் 597-வது பிரிவு அரசியல் சாசனத்திற்கு எதிரானது. அது ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு தீர்ப்பில் கூறியுள்ளார். #Adultery #Section497 #SupremeCourt
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்